|
பெரும்பாலோர் ‘அங்கு போனார்’. ‘இங்கு சென்றார்’ ‘எங்கு கொடுப்பாய்’
என்று எழுதுகின்றனர், இப்படி எழுதுவது தவறு, அங்குப் போனார், இங்குச்
சென்றார் ‘எங்குக் கொடுப்பாய்’ என்றே எழுதவேண்டும், அங்கு, இங்கு, எங்கு
என்னும் சொற்களுக்குப்பின் கட்டாயம் வல்லெழுத்து மிகும் என்பதறிக,
2. சொற்கள் க்கு. ச்சு. ட்டு. த்து. ப்பு ற்று என முடிந்திருந்தால்.
அச்சொற்களை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் என்பர், மக்கு. தச்சு.
விட்டு. செத்து. உப்பு. கற்று ஆகிய இவை வன்தொடர்க் குற்றியலுகரச்
சொற்கள், இத்தகைய சொற்கள் நிலைமொழியாக இருந்து வருமொழி முதலில்
க. ச. த. ப என்னும் எழுத்துகள் வந்தால். கட்டாயம் வல்லெழுத்து மிகும்.
கீழ் வருவனவற்றைப் பார்த்தால் விளங்கும்,
மக்குப் பையன் செத்துப் பிழைத்தான்
தச்சுத் தொழில் உப்புக் கடை
விட்டுச் சென்றார் கற்றுக் கொடுத்தார்
பத்து. எட்டு என்னும் சொற்களும் இங்கே அடங்கும், (உ-ம்)
பத்துப்பாட்டு. எட்டுத்தொகை. எதிர்த்து பேசினார் என்று எழுதுவது தவறு;
எதிர்த்துப் பேசினார் என்றே எழுத வேண்டும், விற்று சென்றான் என்று
எழுதலாகாது விற்றுச் சென்றான் என்றுதான் எழுதவேண்டும்,
3, ‘நாட்டின் ஆட்சியை கைப்பற்ற’ என்று எழுதுதல் பிழை
‘ஆட்சியைக் கைப்பற்ற’ என்று எழுதுவதே சரியானது, ‘மந்திரி சபைக்கு
போக’ என்று வல்லெழுத்து மிகாமல் எழுதுவது தவறு; ‘மந்திரி சபைக்கு போக’ என்று வல்லெழுத்து மிகாமல் எழுதுவது
தவறு; மந்திரி சபைக்குப் போக’ என்றே எழுத வேண்டும்.
இரண்டாம் வேற்றுமை ‘ஐ’ என்னும் உருபிற்குப் பின்னும்,
நான்காம் வேற்றுமை ‘கு’ என்னும் உருபிற்குப் பின்னும் வல்லெழுத்து
மிகும் என்பதே விதி
வல்லெழுத்து மிகுதலைப் பற்றி எழுதுவது சுவையாக இராது;
படிப்பதும் சிறிது கடினமாக இருக்கும். எனினும், ஒருமுறை இருமுறை
இங்கே எளிதான முறையில் கூறியுள்ளதைப் படித்தறிந்த பழகிவிட்டால்,
இப்பிழை வாராதவாறு எவரும் எழுதலாம்; எழுதவும் முடியும். ‘சித்திரமும்
கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்’,
என்பது உண்மை. மனம் உண்டானால் வழி உண்டாகும். முயற்சி
செய்தால் முடியாதது ஒன்றுமில்லை.
|