பக்கம் எண் :

210நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


15.
வலிமிகுதல்
II

"இந்த இடத்தை பிரயாணிகள் தங்கும் இடமாக உபயோகிக்கக்
கூடாது. டிக்கட்டுகள் வாங்கியவுடன் பிராயணிகள் தங்குமிடத்திற்கு
செல்ல கோறப்படுகிறார்கள்".

"உசிலம்பட்டி வரையிலுள்ள ஸ்டேஷன்களுக்கும் மதுரைக்கு
தெற்கேயுள்ள எல்லா ஸ்டேஷன்களுக்கும் 2-ஆம் வகுப்பு டிக்கட்டுகள்
கொடுக்கப்படும்".

இவ்விரண்டு அறிவிப்புகளும் செந்தமிழ் உலவும் நந்தமிழ்
மதுரைப் புகைவண்டி நிலையத்திலேயே பயணச் சீட்டு விற்குமிடத்திலே
இருந்தவை; பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டவை. எந்தத்
தமிழறியார் திருப்பணியோ இது! புகைவண்டி நிலையத்து எழுத்தர்
திருப்பணியாகத்தான் இஃது இருக்க வேண்டும்.

முதல் அறிவிப்பில் ‘இடத்தை பிரயாணிகள்’ என்று வல்லெழுத்து
மிகாமல் இருப்பது பிழையானது. ‘இடத்தைப் பிராயணிகள்’ என்று எழுத
வேண்டும். ‘தங்குமிடத்திற்கு செல்ல கோறப்படுகிறார்கள்’ என்னும் மூன்று
சொற்களுள்ள தொடரில் மூன்று பிழைகள் உள்ளன. ‘தங்குமிடத்திற்குச்
செல்லக் கோரப்படுகிறர்கள்’ என்று எழுதுவது தான் திருத்தமானது.

இரண்டாவது அறிவிப்பில் ‘மதுரைக்கு தெற்கே’ என்று இருப்பது
தவறானது. ‘மதுரைக்குத் தெற்கே’ என்றிருக்க வேண்டும். இரண்டாம்
வேற்றுமை ‘ஐ’ உருபின் பின்னும் நான்காம் வேற்றுமை ‘கு’ உருபின்
பின்னும் வல்லெழுத்து மிக வேண்டும் என்னும் இவ்விதிகள்
தெரிந்திருந்தால் இப்பிழைகள் நேர்ந்திரா. நாளிதழ் ஆசிரியர்களும்
செய்தி எழுதி