அனுப்புகிறவர்களும் இவை போன்ற பிழைகளைச் செய்து
வருகிறார்கள். ஆதலால், எத்துறையினரும் வல்லெழுத்து
மிகுதலைக் கற்றுக்கொள்ள வேண்டும்; எளிதாகக் கற்கலாம்.
வல்லெழுத்து மிகுதற்குள்ள வேறு விதிகளையும் இங்குக்
காண்போம்.
வேறொரு சொல்லைப் பற்றியல்லாது நி்ற்க முடியாதிருக்கும் ஒரு
குறைந்த வினைச்சொல் மற்றொரு வினை சொல்லைத் தழுவி நின்றால்,
அப்பொருள் குறைந்த வினைச் சொல்லை வினையெச்சம் என்பர்.
தேடப் போனார், எனக் கூறினார், மெல்லச் சொன்னார், தேடிச்
சென்றார். வருவதாய்க் கூறினார். போய்ப் பார்த்தார் என்னும்
இத்தொடர்களில் உள்ள தேட, என, மெல்ல, தேடி, வருவதாய்,
போய் என்பவை வினையெச்சங்களாகும். இவை எச்சச் சொற்களாய்
வினையைத் தழுவி நிற்பதால் வினையெச்சங்கள் எனப்படும்.
தேட, என, மெல்ல என்னும் இவ்வினையெச்சங்கள் அகர ஈற்றில்
முடியும் வினையெச்சங்கள்.
தேடி என்பது இகர ஈற்றில் முடியும் வினையெச்சம்.
போய் என்பது வினையெச்சம்.
வருவதாய் என்பது ஆய் சேர்ந்து வந்த வினையெச்சம்.
அகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும் இகர ஈற்று
வினையெச்சத்தின் பின்னும், ஆய், போய் என்னும் வினை
யெச்சங்களின் பின்னும் வரும் வல்லெழுத்து மிகும். கீழ்வரும்
எடுத்துக் காட்டுகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்; புரிந்து
கொள்ளலாம்.
வரக்கூறினார், தேடப்போனார்.
அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வந்த வல்லெழுத்து
மிகுந்தது.
|