பக்கம் எண் :

212நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

கூறிச்சென்றார், வாடிப்போயிற்று.

இகர ஈற்றுவினையெச்சத்தின் பின் வந்த வல்லெழுத்து
மிகுந்தது.

போய்ச் சொன்னார், போய்த் தேடினார்.

போய் என்னும் வினையெச்சத்தின் பின் வந்த வல்லெழுத்து
மிகுந்தது.

சொன்னதாய்ச்சொல், வந்தாய்க்கூறு.

ஆய் சேர்ந்து வந்த வினையெச்சத்தின் பின் வந்த வல்லெழுத்து
மிகுந்தது.

மதுரைப் புகைவண்டி நிலைய முதல் அறிவிப்பில் ‘செல்ல
கோறப்படுகிறர்கள்’ என்றிருப்பது தவறு என்று முன்னே
குறிப்பிடப்பட்டது. ‘செல்லக் கோரப்படுகிறர்கள்’ என்றிருக்கவேண்டும்
என்று திருத்தமும் முன்னே கூறப்பட்டது. அப்படிக் கூறக் காரணம்
யாதென வினவலாமன்றோ? ‘செல்ல’ என்பது அகர ஈற்று
வினையெச்சம். ஆதலால், ‘செல்லக் கோரப்படுகிறார்கள்’ என்று எழுத
வேண்டும் என்றது. கோரப்படுகிறார்கள் என்பதற்கு விருப்பப்படுகிறார்கள்
என்பது பொருள், இடையின ரகத்திற்கு வல்லின றகரம்
போடப்பட்டிருப்பது பிழை.

இன்னும் ஒரு விதியையும் தெரிந்த கொள்ளலாம். இரண்டு
சொற்கள் இருந்து பொருள் கொள்ளும் போது நடுவில் ஆறாம்
வேற்றுமை உருபாகிய அது என்பது மறைந்து வந்தால், ஆறாம்
வேற்றுமைத் தொகை எனப்படும். குதிரைத் தலை என்பது ஆறாம்
வேற்றுமைத் தொகை. ஆறாம் வேற்றுமைத் தொகையில் முதலில் நிற்கும்
சொல் அஃறிணையாக இருந்தால் வல்லலெழுத்து கட்டாயம் மிகும்.