|
குதிரைக்குளம்பு நரிப்பல்
கோழிக்கால் நாய்க்குட்டி
படைத்தலைவன் கழுதைக்குரல்
சேனைத்தலைவன் பறவைக்கூட்டம்
‘இவ் விதிகளைத் தெரிந்து கொள்ளாமலே எழுத இயலாதா?’ என்று
சிலர் வினவலாம். பிழையில்லாமல் எழுதப்பட்ட அறிஞர்களுடைய
உரைநடை நூல்களைப் படிப்பதால் ஓரளவு இவ் விதிகளை உணராமல்
எழுதக் கூடிய மொழித்திறமை பெறலாம். அப்படித்தான் பலர்
எழுதியும் வருகின்றனர். ஆனால், ‘ஏன் இப்படி வல்லெழுத்து
மிகும்படி எழுதவேண்டும்?’ என்று ஒருவர் அவர்களை வினவினால்,
அவர்கள் பாடு திண்டாட்டந்தான். ‘எல்லாரும் அவ்வாறு
எழுதியிருக்கிறர்கள்; நானும் எழுதுகிறேன்’ என்று அவர்கள்
சொல்வார்களேயன்றி, இக்காரணத்தால் இப்படி எழுத வேண்டும்
என்று கூற அறியமாட்டார்கள். விதிகளைத் தெரிந்த கொண்டால்
அவர்களும் ஐயமின்றி எழுதும் ஆற்றல் மிகும். அவர்கள்,
‘இக்காரணத்தால் இங்கே வல்லெழுத்து மிக வேண்டும்’ என்று நன்கு
தெரிந்து எழுதுவார்கள். எனவே, நல்ல தமிழ் எழுத. விரும்புகிறவர்கள்
வலி மிகும் விதிகளைப் படித்தறிவதைத் தலைவலியாகக் கொள்ளாமல்
அவற்றைப் படித்துத் தெரிந்து கொண்டால் பிழையற எழுதலாம்.
|