பக்கம் எண் :

214நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


16.
வலி மிகுதலும் மிகைமையும்

வலி மிகுதலும் மிகாமையும் என்னும் தலைப்பைக் கண்டு
அஞ்ச வேண்டுவதில்லை. வல்லெழுத்து மிகுந்து வருதலும், மிகாது
வருதலும் இங்கே குறிப்பிடப்படுகின்றன.

பொருளை நன்கு தெரிந்து கொள்வதற்கும் நாம் எழுதும்
பொருளைப் பிறர் புரிந்து கொள்வதற்கும், வலி மிகுதலைப் பற்றியும்
மிகாதிருத்தலைப் பற்றியும் அறிந்து கொள்வது இன்றியமையாதது.

‘பசி பிணி பகை’ இவை குலோத்துங்கன் ஆட்சியில் இல்லை’
என்னும் வாக்கியத்திற்கும், ‘பசிப்பிணி, பகை இவை குலோத்துங்கன்
ஆட்சியில் இல்லை’ என்னும் வாக்கியத்திற்கும் பொருளில் மிகுந்த
வேறுபாடு உண்டு. முதல் வாக்கியத்தில் பசியும் பிணியும் பகையும்
இல்லை என்பது பொருள். இரண்டாம் வாக்கியத்தில் பசியாகிய
பிணியும் பகையும் இல்லை என்பது பொருள். இரண்டிற்கும் உள்ள
வேறுபாடு வலி மிகுதலால் உண்டாகிறது என்பதை உணரலாம்.

ஓடா குதிரைகள் என்பதற்கும், ஓடாக் குதிரைகள் என்பதற்கும்
நிரம்ப வேறுபாடு உண்டு. ஓடா குதிரைகள் என்றால் குதிரைகள்
ஓடமாட்டா என்றும், ஓடாக் குதிரைகள் என்றால் ஓடாத குதிரைகள்
என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

மேற்குறித்த வேறுபாடு உணர்ந்து பிழையின்றி நல்ல தமிழ்
எழுதுவதற்கு ஓர் அளவு இலக்கணம் அறிய வேண்டுவது
இன்றியமையாதது. இலக்கணத்தின் நோக்கம் என்ன பிறர் தவறின்றிப்
புரிந்து கொள்வதற்கும், தவறின்றிக் கருத்தை வெளியிடுவதற்கும்
கருவியாக உதவுவது இலக்கணம். அதனால், இங்கே வல்லெழுத்து
மிகுவதை நன்கு தெரிந்து கொள்வதற்குத் தொடர்