இலக்கணம் இன்றியமையாததாகிறது. எனவே, இங்கு மிக மிக எளிய
முறையில் நன்கு மனத்தில் இருத்தும் பொருட்டுத் திரும்பவும்
தொடரிலக்கணம் கூறப்படுகிறது.
|
தொடர்
|
தொகாநிலைத் தொடர்
(Non-Eliptical Compound) |
தொகைநிலைத்
தொடர்
(Eliptical Compound) |
இரண்டு சொற்களுக்குக் குறையாமல் தொடர்ந்து வருவது
தொடராகும். ஒரு செல்லைத் தொடர் எனல் கூடாது. வண்டித்
தொடர் என்று எப்பொழுது கூறுகிறோம்? ஒன்றுக்கு மேற்பட்ட
வண்டிகள் தொடர்ந்து நிற்கும்போதுதான் கூறுகிறோம். அதுபோல
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்தால்தான் தொடர்
என்று சொல்ல வேண்டும்.
கோழி கூவிற்று என்பது தொடர்.
தொடர், தொகாநிலைத் தொடர் என்றும், தொகை நிலைத் தொடர்
என்றும் இருவகைப்படும். தொகாநிலைத் தொடரைத் தொடர் என்றும்,
தொகைநிலைத் தொடரைத் தொகை என்றும் கூறுவர்.
இரண்டு சொற்கள் இருந்து பொருள் கொள்ளும் போது நடுவில்
ஒன்றும் மறையாமல் இருப்பதாலே அத்தொடரைத் தொகாநிலைத்
தொடர் என்கிறோம். இரண்டு சொற்கள் இருந்து பொருள்
கொள்ளும்போது நடுவில் யாதாவது மறைந்து வருவதைத் தொகை
நிலைத் தொடர் என்கிறோம். கோழி கூவிற்று என்னும் தொடரில்
ஒன்றும் தொக்கி நிற்கவில்லை. ஆதலால். இது தொகாநிலைத் தொடர்
எனப்படுகிறது. தங்கை சட்டை என்னும் தொடரானது தங்கையினது
சட்டை எனப்பொருள் தருவதால், ‘அது’ என்னும் உருபு மறைந்து
நிற்பதால், அதனைத் தொகைநிலைத் தொடர் என்கிறோம்.
|