பக்கம் எண் :

216நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

துணி கிழிந்தது - தொகாநிலைத் தொடர்

துணி கட்டு - தொகைநிலைத் தொடர்

துணி கிழந்தது - இஃது எழுவாயத் தொடர். எழுவாய் முதலில்
இருப்பதால் எழுவாய்த் தொடராகிறது. கிளி பேசுகிறது - இஃது
எழுவாய்த் தொடர். எழுவாய்த் தொடரில் பெரும்பாலும் வல்லெழுத்து
மிகாது.

ஓடா குதிரைகள் - இது வினைமுற்றுத் தொடர். வினைமுற்று
முதலில் இருப்பதால் இது வினை முற்றுத் தொடர். வினை
முற்றுத்தொடரில் வல்லெழுத்து மிகாது. ஓடாக்குதிரைகள் என்னும்
தொடரைப் பெயரெச்சத் தொடர் என்போம். ஓடாத என்னும் சொல்லில்
இருக்கும் ‘த’ என்னும் ஈறு கெட்டு விட்டது. ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சத் தொடரில் வரும் வல்லெழுத்து மிகுந்து வருமாதலால்
ஓடாக்குதிரைகள் என்று எழுத வேண்டுவதாகிறது.

தொகைநிலைத் தொடரானது சொற்சுருக்கத்துக்காகத் தமிழில்
அமைந்து கிடக்கிறது. சொற்களின் சிக்கனத்திற்காகவும் புதுச் சொற்களை
ஆக்கிக் கொள்வதற்காகவும் நம் முன்னோர்கள் தொகைநிலைத்
தொடர்களை விஞ்ஞான முறையில் அமைத்திருத்தலை எண்ணும்
போது அவர்களது நுண்ணறிவைக் கண்டு வியப்படைகிறோம்.

தொகைநிலைத் தொடரைத் தொகை என்கிறோம். இரண்டு
சொற்கள் தொடர்ந்து நின்று பொருள்கொள்ளும் போது, இடையில்
ஏதாவது தொக்கி அஃதாவது மறைந்து வருதையே தொகை என்பது
முன்னரே குறிப்பிடப்பட்டது. துணி கட்டு - இது தொகை நிலைத்
தொடர். தொகை ஒரு சொல் நீர்மைத்து; அஃதாவது இரண்டு
சொற்களாக நின்றாலும் ஒரு சொல் போன்ற தன்மையுடையது.

செடிகொடிகள் - இஃது உம்மைத்தொகை; நடுவில் இணைக்கும்
உம் மறைந்திருப்பதால், உம்மைத் தொகை.