பக்கம் எண் :

வலிமிகுதலும் மிகாமையும் 217


பூரிகிழங்கு, இட்டலிசாம்பார்-இவை உம்மைத்தொகைகள். உம்மைத்
தொகையில் வல்லெழுத்து மிகாது. செடிக்கொடிகள், பூரிக்கிழங்கு.
இட்டலிச் சாம்பார் என்று எழுதுவது தவறு. இப்படி எழுதினால்
இவை உம்மைத் தொகைகள் ஆகா. பொருளும் வேறுபடும்.
யானை குதிரை - உம்மைத் தொகை. உம்மைத் தொகையில்
வலி மிகவில்லை. ஆதலால், உம்மைத் தொகையில் வலி மிகாது
என்றறிக.

மலைத்தோள் - இஃது உவமைத்தொகை. உவமையைக் காட்டும்
சொல் மறைந்து வந்திருப்பதால் உவமைத்தொகை. உவமைத்தொகையில்
வல்லெழுத்து மிகுந்து வந்திருத்தலைக் காண்க.

வேற்றுமைத்தொகையில் இரண்டு வகை உண்டு. வேற்றுமை உருபு
மட்டும் மறைந்து வருந்தொகை வேற்றுமைத்தொகை. துணி கட்டு -
இஃது இரண்டாம் வேற்றுமைத்தொகை. இங்கே வல்லெழுத்து மிகாது.
குதிரைக் கழுத்து - இஃது ஆறாம் வேற்றுமைத் தொகை. ஆறாம்
வேற்றுமைத் தொகையில் முதலில் நிற்கும் சொல் அஃறிணையாக
இருக்குமானால் வல்லெழுத்து மிகும். கிளிக்கால், வையைக்கரை -
இங்கே வலி மிகுந்திருப்பது காண்க. ஆறாம் வேற்றுமைத்
தொகையில் நிலைமொழி உயர்திணையாக இருந்தால், வல்லெழுத்து மிகாது.
சீதை கை, தம்பி சட்டை, கண்ணகி கோயில், - இங்கு நிலைமொழி
உயர்திணையாய் இருப்பதால் வலி மிகவில்லை,.

மற்றொரு வேற்றுமைத் தொகை உண்டு. இதனை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை என்பர். யானைப்பாகன் என்னும் தொடரில் ‘ஐ’
உருபும், ‘ஓட்டும்’ என்னும் பயனைத் தரும் சொல்லும் மறைந்திருப்பதால்,
இத்தொகையை உருபும் பயனும் உடன்தொக்க தொகை என்கிறோம்.
‘யானையை ஓட்டும் பாகன்’ என்பது இத்தொடருக்குப் பொருள்.
உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வரும் வல்லெழுத்துக்
கட்டாயம் மிகும்.