பக்கம் எண் :

218நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

சிற்றுண்டிச்சாலை, தண்ணீர்த்தொட்டி, 2-ஆம் வேற்றுமை உருபும்
பயனும் உடன்தொக்க தொகையில் வலிமிகுந்தது.

தங்கக்காப்பு, பருத்தித்துணி, தகரப்பெட்டி - 3-ஆம் வேற்றுமை
உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வலி மிகுந்தது.

குழந்தைப்பால்-4-ஆம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க
தொகையில் வலி மிகுந்தது.

மலைப்பாம்பு, மதுரைச் சொக்கநாதர் கோயி்ல் மதுரைத்
தியாகராசர் கல்லூரி, கல்லூரிக் கழகம், சென்னைத் தமிழ்ச்சங்கம்-7-ஆம்
வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வலி மிக்கது.

மல்லிகைப்பூ - இஃது இருபெயரொட்டுப் பண்புத் தொகை.
சிறப்புப் பெயரும் பொதுப் பெயரும் இருந்து ‘ஆகிய’ என்பது தொக்கி
வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும். மல்லிகை
என்பது சிறப்புப் பெயர். ஒரு வகையைக் குறிப்பது சிறப்புப் பெயர்.
பூ என்பது பொதுப் பெயர். பொதுவான பெயர் பொதுப் பெயர். இரு
பெயர் ஒட்டிவருவதால் இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்கிறோம்.
இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் இருபெயரும் ஒன்றையே
குறிக்க வேண்டும். இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில்
வருமொழி வல்லெழுத்தில் தொடங்கினால் வல்லெழுத்து மிகும்.

ஆடித்திங்கள், ஆவணித்திங்கள்,

சென்னைப்பட்டினம், மதுரைப்பட்டணம், பசிப்பிணி.

குடிதண்ணீர், சுடுகாடு - இவை வினைத்தொகைகள் மூன்று காலம்
காட்டும் விகுதி மறைந்து வருவது வினைத்தொகை வினைத்தொகையில்
வல்லெழுத்து மிகாது.

கீழ்+கணக்கு என்று இரண்டும் சேரும்பொழுது அவை கீழ்கணக்கு
என்றும் கீழ்க்கணக்கு என்றும் வரும். ‘கீழ் என கிளவி