வர + சொன்னான் =
மெல்ல + பேசினார் =
ஓடி + போனான் =
கேட்பதாய்+கூறினான் =
போய் + தேடினான் =
இருப்பதாக + கூறு =
என + கேட்டான் =
|
வரச்சொன்னான்.
மெல்லப்பேசினார்.
ஓடிப்போனான்.
கேட்பதாய்க்கூறினான்.
போய்த்தேடினான்.
இருப்பதாகக்கூறு.
எனக்கேட்டான். |
5. வன்தொடர்க்
குற்றியலுகரத்தின் பின்வரும் வலி மிகும்.
எட்டு + கட்டுகள் =
பத்து + செய்யுள்கள் =
கற்று + கொடுத்தான் =
விட்டு + சென்றாள் =
வைத்து + போனான் =
கொக்கு + பறந்தது =
|
எட்டுக்கட்டுகள்.
பத்துச்செய்யுள்கள்.
கற்றுக்கொடுத்தான்.
விட்டுச்சென்றாள்.
வைத்துப்போனான்.
கொக்குப்பறந்தது. |
குறிப்பு : கொக்குப் பறந்தது என்னும் தொடர் எழுவாய்த்
தொடராயினும் நிலைமொழி வன்றொடர்க் குற்றியலுகரமானதால்
வலிமிக்கு வந்தது என்பதறிக. இங்கு வலி மிகுதலை விரும்பாவிட்டால்
கொக்கு என்னும் சொல்லின் பக்கத்தில் காற்புள்ளியிட்டு கொக்கு, பறந்தது
என்று இவ்வாறு எழுதுக.
6. திரு, நடு, முழு, விழு, பொது, அணு போன்றுள்ள
முற்றியலுகரச் செற்களுக்குப் பின்வரும் வலி மிகும்.
திரு + கோயில் =
நடு + தெரு =
முழு + பேச்சு =
|
திருக்கோயில்.
நடுத்தெரு.
முழுப்பேச்சு. |
|