பக்கம் எண் :

224நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

கீழ்வரும் சொற்களுக்குப்பின் க,ச,த,ப வருக்க எழுத்துகளில்
அமைந்த சொல் வருமொழியாக வந்தால் வலி மிகும்.

1. அ,இ,எ; அந்த, இந்த, எந்த; அங்கு, இங்கு, எங்கு; ஆங்கு,
ஈங்கு, யாங்கு; அப்படி, இப்படி, எப்படி; ஆண்டு, ஈண்டு, யாண்டு;
அவ்வகை, இவ்வகை, எவ்வகை; அத்துணை, இத்துணை, எத்துணை;
இனி, தனி; அன்றி, இன்றி; மற்ற, மற்றை, நடு, பொது, அணு, முழு,
புது, திரு, அரை, பாதி; எட்டு, பத்து; முன்னர், பின்னர் ஆகிய
இச்சொற்களுக்குப் பின் வரும் வலிமிகும். இந்நூலின் பக்கங்கள்
206-207இல் வந்துள்ள எடுத்துக்காட்டுகளைக் காண்க.

2. ஒரெழுத்து ஒரு மொழிக்குப்பின் வரும் வலி மிகும்.

பூ + பறித்தான் =
தீ + பிடித்தது =
கை + குழந்தை =
பூ + பந்தல் =
பூப்பறித்தாள்
தீப்பிடித்தது
கைக்குழந்தை
பூப்பந்தல்

3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வரும்
வலி மிகும்.

அறியா + பிள்ளை =
காணா + காட்சி =
சொல்லா + சொல் =
நிலையா + பொருள் =
தீரா + துன்பம் =
அறியாப்பிள்ளை.
காணாக்காட்சி.
சொல்லாச்சொல்.
நிலையாப்பொருள். தீராத்துன்பம்.

4. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும், ஆய், போய்,
ஆக என என்னும் வினையெச்சங்களின் பின்னும் வரும் வலி மிகும்.