|
வீட்டிலிருந்து கொடு. மலையினின்று கழிந்த.
5-ஆம் வேற்றுமை உருபுகளின் பின் வரும் வலி மிகாது.
கோழியினது கொண்டை, தம்பியினுடைய சட்டை, என கைகள்.
6-ஆம் வேற்றுமை உருபுகளின் பின் வலிமிகாது. என -
என்னுடைய, என் + அ = என. அ என்பது ஆறாம் வேற்றுமை
உருபு.
3. ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிற
பெயரெச்சங்களின் பின்வரும் வல்லெழுத்து மிகாது. ஓடிய குதிரை
என்னும் தொடரிலுள்ள ஓடிய என்பது பெயரெச்சம். ஓடாத குதிரை
என்னும் தொடரிலிருக்கும் ஓடாத என்பது ஈறுகெடாத எதிர்மறைப்
பெயரெச்சம். ஓடாக் குதிரை என்னும் தொடரிலுள்ள ஓடா என்பது
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இந்த ஈறு கெட்ட எதிர்மறைப்
பெயரெச்சத்தின் பின்வரும் வல்லெழுத்து மட்டும் மிகும்; மற்றபடி ஈறு
கெடாத பெயரெச்சங்களின் பின் வரும் வல்லெழுத்து மிகவே மிகாது.
பெரிய பெட்டி, சிறிய குதிரை, நல்ல பாம்பு, நல்ல குழந்தை,
படித்த பையன், படியாத பெண்.
பெயரெச்சங்களின் பின்வரும் வல்லெழுத்து மிகாது.
ஓடாக் குழந்தை
இங்கு ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் மட்டும்
வந்த வல்லெழுத்து மிகுந்திருப்பது காண்க.
4. கூப்பிடுகின்ற விளிப்பெயர், மரியாதையாகத் தமிழ்ப்
பண்பாட்டுக்குரிய முறையில் சொல்லும் வியங்கோள் வினை முற்று
ஆகிய இவற்றின் பின் வரும் வலி மிகாது.
தம்பி, போ.
விளித் தொடரில் வலி மிகவில்லை,
வாழி பெரியோய்! வீழ்க கொடுமை!
வியங்கோளின் பின் வலி மிகவில்லை.
|