5. ன்று, ந்து, ண்டு என்று முடியும் வினையெச்சங்களுக்குப்
பின் வரும் வல்லெழுத்து மிகாது. இலக்கண முறையில் மென்தொடர்க்
குற்றுகரச் சொற்களுக்குப் பின்வரும் வல்லெழுத்து மிகாது.
என்று கூறினார். வந்து கேட்டார்.
கண்டு பேசினார். நன்று பேசினாய்.
6. ஆ,ஓ,யா என்னும் கேள்வி கேட்கும் வினாக்களுக்குப் பின்
வரும் வலி மிகாது?
அவனா போனான்? தம்பியோ கேட்கிறான்?
யா சிறியன? (யா-யாவை)
7. தேற்றம், பிரிநிலை ஆகிய பொருள்களில் வரும் ஏகாரங்களுக்குப்
பின் வரும் வலி மிகாது.
அவனேதான் இதைக் கொடுத்தான்.
பெண்களுள் தமயந்தியே சிறந்தவள்.
8. எண்ணுப் பொருளில் வரும் ஏகாரத்தின் பின்னும்
ஐயப்பொருளில் வரும் ஓகாரத்தின் பின்னும் வரும் வலி மிகாது.
காயே கிழங்கே வாங்கு.
இங்கு வந்த ஏகாரம் எண் ஏகாரம்.
காயோ கிழங்கோ வாங்கு.
இங்கு வந்த ஓகாரம் ஐய ஓகாரம்.
9. இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வருந்தொடர்களில்
வரும் வலி மிகாது.
ஆதி+பகவன் =
தேச+பக்தி =
|
ஆதிபகவன்.
தேசபக்தி.
|
|