பக்கம் எண் :

வலிமிகாமைக்குரிய விதிகள் 245


அச்சிடப்பட்டுள்ளதைக் காணலாம். ஒரு சிலவற்றில் அப்படியில்லை.
வாக்குக்கள், வழக்குக்கள், வகுப்புக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள்
என்று எழுதும் முறை காதுக்கும் இனிமையாக இல்லாதிருப்பதால்,
வாக்குகள், வழக்குகள், வகுப்புகள், எழுத்துகள், கருத்துகள் என்று
வலிமிகாமல் எழுதுவதையே யான் மேற்கொண்டுள்ளேன். பழையன
கழிதலும் புதியன புகுதலும் கால முறையில் வழுவல என்பதறிக.

வலி மிகாத தொடர்களின் வரிசை

கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைப் படிக்கவும்:

அண்ணா கொடு
அவர் தலை
அது போயிற்று
அவை சென்றன
அவ்வளவு காலம்
அன்று பேசினார்
அத்தனை செடிகள்
அரிய பொருள்
அரிய பெரிய
அவரோ கொடுத்தார்?
அவரோ போனார்?
அறிவு பெற்றான்
அறுசுவை
அறிந்தவாறு சொன்னான்
அன்னை தந்தை
அமெரிக்கா கண்டம்
அவ்வாறு கூறினார்
ஆஸ்டிரேலியா கண்டம்
ஆடு கொடி
ஆறு பொருள்கள்
ஆண்டு கொண்டான்
ஆதரவு தந்தான்
ஆடாது செய்தால்
ஆதி பகவன்
ஆணோ பெண்ணோ
ஆப்பிரிக்கா கண்டம்


இது போயிற்று
இன்று சென்றான்
இவை போகின்றன
இத்தனை கொடிகளா?
இவ்வளவு அழகாய் இருக்கிறாளா?
இவ்வளவு கடுகு கொடு
இரண்டு சிறுவர்கள்
இரு பொருள்
இரவு பகலாக
இரவு கழிந்தது
இடி சுவர்
இருந்தபடி செய்து கொடு
இல்லை பொருள்
இவ்வாறு சொன்னார்