பக்கம் எண் :

244நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

வாரா குதிரைகள்.

முற்று வினைக்குப் பின் வலி மிகவில்லை. வினைமுற்றுத்
தொகாநிலைத் தொடரில் வலி மிகாது.

19. ‘அம்ம’ என்னும் இடைச் சொல்லின் பின் வரும் வலி மிகாது.

அம்ம+கொடிது = அம்ம கொடிது!

20. வன்றொடர்க் குற்றியலுகரச் சொற்களின் பின் ‘கள்’, ‘தல்’,
என்னும் விகுதிகள் சேரும் போது வரும் வலி மிகுதல் நன்றன்று;
பிழை என்று சொல்வதற்கில்லை.

வாக்கு+கள் =
தோப்பு+கள் =
எழுத்து+கள் =
வாக்குகள்.
தோப்புகள்.
எழுத்துகள்.
வாழ்த்து+தல் =
கூப்பு+தல் =
தூற்று+தல் =
வாழ்த்துதல்.
கூப்புதல்.
தூற்றுதல்.

‘இப்படி எழுதுவதற்கு விதி உண்டா?’ என்றால், உண்டு.
அவ்விதி வருமாறு:

"இடையுரி வடசொலின் இயம்பிய கொளாதவும்
போலியும் மரூஉவும் பொருந்திய வாற்றிற்கு
இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே"

- நன்னூல்

‘இடைச்சொல் உரிச்சொல் வடசொல் இவற்றிற்குச் சொல்லிய
விதிகளும் கூறப்படாதனவும், போலியும் மரூஉவும் பொருந்திய
வகையில் புணர்தலைக் கொள்ளுதல் அறிவுடையோர் யாவர்க்கும்
முறையாகும்’.

இது மகாவித்துவான் மே வீ. வேணுகோபாலப் பிள்ளையவர்கள்
கொள்ளும் பொருளாகும். இப்பொருள் பொருத்தமாகவும் தெரிகிறது.

ஆனால், பெரும்பாலனவான பழைய நூல்களிலும் புதியன
வாய் வெளிவந்தனவற்றிலும் வாக்குக்கள், எழுத்துக்கள் என்றே