16. வன்தொடர்க் குற்றியலுகரம் தவிர மற்றக் குற்றியல்
உகரங்களுக்குப் பின் வரும் வல்லெழுத்துப் பெரும்பாலும்
மிகுவது இல்லை.
கடுகு+சிறிது = கடுகு சிறிது.
உயிர்த் தெடர்க் குற்றியல் உகரத்துக்குப் பின் வலி மிகவில்லை.
செய்து+கொடு = செய்து கொடு.
இடைத் தொடர்க் குற்றியல் உகரத்துக்குப் பின் வலி மிகவில்லை.
எஃகு+கூர்மை = எஃகு கூர்மை.
ஆய்தத் தொடர்க் குற்றியல் உகரத்துக்குப் பின் வலி மிகவில்லை.
17. எழுவாய்த் தொடரில் வருமொழி க,ச,த,ப வருக்கங்களில்
உள்ள எழுத்துகளில் சொல் இருந்தால் வல்லெழுத்து மிகாது.
நீ பெரியை; வண்டி சிறியது; கோழி பெரியது;
நாய் தின்றது; காய் சிறியது; கூழ் போதாது.
18. முன்னிலை வினைமுற்று, ஏவல் வினைமுற்று, முற்றுவினை
இவற்றிற்குப் பின்வரும் வல்லினம் இயல்பாகும். அஃதாவது
வலி மிகாது.
வருதி குமரா!
முன்னிலை வினைமுற்றின் பின் வலி மிகவில்லை.
போ தம்பி!
ஏவல் வினைமுற்றின் பின் வலி மிகவில்லை
|