பக்கம் எண் :

242நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

பங்கு+பிரித்தான் =
பறவை+பிடித்தான் =
கனி+தின்றான் =
துணி+ கட்டு =
தமிழ்+படித்தார் =
நீர்+குடித்தது =
தேர்+செய்தான் =
காய்+கடித்தான் =
பங்கு பிரித்தான்.
பறவை பிடித்தான்.
கனி தின்றான்.
துணி கட்டு.
தமிழ் படித்தார்.
நீர் குடித்தது.
தேர் செய்தான்.
காய் கடித்தான்.

குறிப்பு : பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில்
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின்
வலி மிகுவதுண்டு.

ஒன்னலர்ச் செகுத்தான்.
(ஒன்னலரைச் செகுத்தான் என்பது பொருள்.)

13. நான்காம் வேற்றுமைத் தொகையில் உயர்திணைப்
பெயர்களின் பின்வரும் வலி மிகாது.

பொன்னி+கணவன் = பொன்னி கணவன்.
(பொன்னிக்குக் கணவன் என்பது பொருள்.)

14. ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி
உயர்திணை யாயிருந்தால் வலி மிகாது.

காளி கோயில்; கண்ணகி கை; தம்பி துணி; ஐயனார் கோயில்;
அன்னார் கேண்மை.

15. ஏழாம் வேற்றுமைத் தொகையில் சில இடங்களில்
வலிமிகாது.

வாய்+புகுந்தது = வாய் புகுந்தது.