பக்கம் எண் :

402நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

வழிமேல் விழி வைத்துப்
பார்த்திருந்தான்.
வயிறார உண்ட
வல்லடி வழக்கு
வாயுவேகம் மனோவேகம்
வாய்வீரன் (ம)
வாய்வள்ளல் (ம)
வாயாரப் புகழ்ந்தான்
வாயில்லாப் பூச்சிகள்
வாழ்நாளை வீழ்நாளாக்காமல்
வாழையடி வாழையாக
விசுவாமித்திரப் படைப்பு (ம)
(புதிய படைப்பு)
விழலுக்கு இறைத்த நீர் (வீண்)
விலாப்புடைக்க உண்டான்.
விண்ணாட்டுக்கு விருந்தாய்ச்
சென்றார் (ம) (இறந்தார்)
வியத்தொறும் வியத்தொறும்
விரிப்பின் அகலும்
தொகுப்பின் எஞ்சும்.
விருப்பு வெறுப்பு இன்றி
வீடும் வாசலுமாக
வீம பாகம்
வெள்ளை வெளேல்
வெள்ளிடை மலை (ம)
வேரைக் கிளறி வெந்நீர்
ஊற்றாதே (ம)
வேர்ப்புழு (ம)
வேழம் உண்ட விளங்கனி (ம)
வைகுண்ட பதவி (மரபு)
யடைந்தார் (இறந்தார்)
(வைணவ மரபு)