பக்கம் எண் :

பழமொழிகள் 403


34.
பழமொழிகள்



அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.
அடக்கம் ஆயிரம் பொன் தரும்.
அடாது செய்பவர் படாது படுவர்.
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்.
அடியாத மாடு படியாது.
அதிக ஆசை அதிக நஷ்டம்.
அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்.
அந்தியில் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை.
அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்.
அலை ஓய்வது எப்போது? தலை முழுகுவது எப்போது?
அலை மோதும்போது தலை முழுக வேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்.
அறையில் ஆடி அம்பலத்தில் ஆடு.
அன்பான நண்பனை ஆபத்தில் அறியலாம்.
அள்ளாது குறையாது; சொல்லாது பிறவாது.
அன்னம் இட்டவர்கள் வீட்டில் கன்னமிடலாமா?
அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும்.
அழுகிற பிள்ளை பால் குடிக்கும்.