பக்கம் எண் :

404நல்ல தமிழ் எழுத வேண்டுமா?
ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்.
ஆடி விதை; தேடி நடு.
ஆடு கொழுக்கிறது இடையனுக்கு லாபம்.
ஆள்பாதி; ஆடை பாதி.
ஆடையில்லாதவன் அரை மனிதன்.
ஆட்டுக்கு வால் அளவாய் அளந்து வைத்திருக்கிறது.
ஆடிக் கறப்பதை ஆடிக் கற; பாடிக் கறப்பதைப் பாடிக் கற.
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆத்திரக்காரனுக்குச் சாத்திரம் உண்டா?
ஆணை அடித்து வளர்; பெண்ணைப் போற்றி வளர்.
ஆபத்துக்குப் பாவமில்லை.
ஆபத்தும் சம்பத்தும் ஆருக்கும் உண்டு.
ஆமை புகுந்த கிணறும் அமீனா நுழைந்த வீடும் ஆகா.
ஆயிரம் கலம் நெல்லுக்கு ஓர் அந்துப் பூச்சி போதும்.
ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
ஆரும் அற்றதே தாரம்; ஊரில் ஒருவனே தோழன்.
ஆழம் அறியாமல் காலை விடாதே.
ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.
ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்.
ஆனைக்கும் அடி சறுக்கும்.
ஆனைக்கும் ஒரு காலம்; பூனைக்கும் ஒரு காலம்.
ஆனை ஏறியும் திட்டி வாசல் நுழைவதா?
(திட்டி வாசல் - சிறு நுழைவு வாசல்)
ஆனை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே.