பக்கம் எண் :

பழமொழிகள் 405
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இடறின காலே இடறும்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இமயஞ் சேர்ந்த கருங்காக்கை பொன்னிறமாகும்.
இளமையிற் கல்வி முதுமையில் காக்கும்.
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை.
இலங்கணம் பரம ஒளஷதம். (இலங்கணம் - பட்டினி போடுதல்)
இல்லாதவனோ பொல்லாதவனோ.
இல்லாது பிறவாது; அள்ளாது குறையாது.
இளைத்தவன் ஏழு வருஷத்திற்கு எள் விதைக்க வேண்டும்.ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈயிடம் நோயிடம்.உருவு திரு ஊட்டும். (திரு - செல்வம்)
உலகம் பலவிதம்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
உதிரம் உறவு அறியும்.
உண்ட இளைப்பு தொண்டருக்கும் உண்டு.
(தொண்டர் - காவல் காப்பவர்)
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது.
உற்ற நண்பன் உயிருக்கு அமிர்தம்.
உத்தியோகம் புருட லட்சணம்.