பக்கம் எண் :

406நல்ல தமிழ் எழுத வேண்டுமா?




ஊமை ஊரைக் கெடுக்கும்.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
ஊன்றக் கொடுத்த தடி உச்சியைப் பிளக்கிறது.
ஊரார் உடைமைக்குப் பேயாய்ப் பறவாதே.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.



எச்சில் இலை எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர்
என்று எண்ணச் சொன்னார்களா?
எட்டி பழுத்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன?
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?
எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எருது ஈனும் என்னும் முன்னே என்ன கன்று என்று கேட்பதா?
எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழை பெய்யும்.



ஏட்டுச் சுரைக்காய் கறி சமைக்க உதவாது.
ஏழையைக் கண்டால் மோழையும் பாயும்.
ஏழை சொல் அம்பலத்துக்கு ஏற்குமா?



ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையுமா?
ஐந்தும் ஆறும் இருந்தால் அறியாத பெண்ணும் கறி சமைப்பாள்.
ஐந்து பெண் இருந்தால் அரசனும் ஆண்டி.