பக்கம் எண் :

உவமைகள் 419

35.
உவமைகள்



அகழியிலிருக்கும் முதலைக்கு அதுவே வைகுண்டம் போல.
அத்தி பூத்தாற் போல.
அனலில் இட்ட மெழுகு போல.
அன்ன நடை கற்கப் போய்த் தன் நடையும் இழந்தாற் போல.
அலை ஒய்ந்த கடல் போல (அச்சபை அடங்கியது.)
அணை கடந்த வெள்ளம் போல.
அங்காடி நாய் போல (அலைந்தேன்.)
அன்னம் இருந்த மென்மலரைப் புன்காகம் கொள்ளப் போனாற் போல.
அனலில் படும் நெய் போல.
அழகுக்கு அழகு செய்வது போல.
அழுகிற குழந்தைக்கு வாழைப்பழம் காட்டுவது போல.
அவசரக் கோலம் அள்ளித் தெளித்தது போல.
அடியற்ற மரம் போலப் (படிமிசை வீழ்ந்தான்.)
அவன் நெருங்கியது அலையில் அகப்பட்ட துரும்பு போல (ஆனாள்.)
அரைக் கிணறு தாண்டியவன் போல.