| 420 | நல்ல தமிழ் எழுத வேண்டுமா? |
ஆ
ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல.
ஆறிடும் மேடும் மடுவும் போல.
ஆற்றில் கரைத்த புளி போல.
இ
இலை மறை காய் போல.
இஞ்சி தின்ற குரங்கு போல.
இமயஞ் சேர்ந்த கருங்காக்கை பொன்னிறமடைவது போல.
இடி ஓசை கேட்ட நாகம் போல.
இடி விழுந்த மரம் போல.
இரும்பை இழுக்கும் காந்தம் போல.
இலவு காத்த கிளி போல (உண்மை காண விரும்பியவர்கள்
இலவு காத்த கிளி போல ஏமாற்றமடைந்தார்கள்.)
இருதலைக் கொள்ளி எறும்பு போல.
உ
உடும்புப் பிடி போல.
உட்சுவர் இருக்கப் புறஞ்சுவர் பூசுவார் போல.
உயிரும் உடம்பும் போல.
உமையும் சிவனும் போல.
உமி குற்றிக் கை வருந்தினாற் போல.
உள்ளங்கை நெல்லிக்கனி போல.
உகிர்ச் சுற்றின் மேல் உலக்கை விழுந்தாற் போல.
(உகிர்ச்சுற்று - நகச்சுற்று)
ஊ
ஊசியும் சரடும் போல.
ஊமை கண்ட கனவு போல.
ஊர் எரியும் போதும் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டது போல.
|
|
|