பக்கம் எண் :

உவமைகள் 421




எலியும் பூனையும் போல.
எள்ளுக்குள் எண்ணெய் போல.
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல.



ஏழை கண்ட பெருந்தனம் போல.



ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஒட்டியது போல.
ஒருநாள் கூத்துக்கு மீசை சிரைத்தாற் போல.



கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வது போல.
கல்லுப் பிள்ளையார் போல.
கண்ணிலான் கண் பெற்று இழந்தாற் போல.
கறவை பிரிந்த கன்று போல.
கயிரற்ற சூத்திரப் பாவை போல.
கரும்பிருக்க இரும்பைக் கடித்தாற் போல.
கடல் மடை திறந்தாற் போல.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு
உடைத்தாற் போல.
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல.
கடன் பட்டான் நெஞ்சம் போல.
கறையான் புற்றெடுக்கக் கருநாகம் புகுந்த கதை போல.
கான மயிலாடக் கண்டு ஆடும் வான்கோழி போல.
காற்றெதிர ஏற்றிய விளக்குப்போல
கார் மேகத்தைக் கண்ட மயில் போல.