பக்கம் எண் :

422நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


காட்டுத் தீப்போலப் (பரவிற்று.)
கிணற்றுத் தவளை போல.
கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல.
கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல.
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற் போல.
குன்று முட்டிய குரீஇ போல.
குடத்துள் விளக்குப் போல.
குட்டி போட்ட பூனையைப் போல.
குரங்கின் கையில் கொள்ளி கொடுத்தாற் போல.
குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பைப் போல.
குருடும் செவிடும் கூத்துப் பார்த்தாற் போல.
குருடனுக்குக் குருடன் வழி காட்டியது போல.
குரைக்கின்ற நாய்க்கு எலும்பு போட்டாற் போல.
குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொண்டாற் போல.
குறிச்சி புக்க மான் போல.
குன்றின் மேல் இட்ட விளக்குப் போல.
கூழில் விழுந்த ஈப் போல.
கொல்லன் தெருவில் ஊசி விற்பது போல.
கொழுகொம்பில்லாத கொடி போல.
கோலெடுத்தாற் குரங்காடுவது போல.
கோழி திருடிவிட்டுக் கூடக் குலாவுவது போல.



சந்தனச் செப்பைத் திறக்கப் பாம்பு வந்தது போல.
சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போல.