பக்கம் எண் :

உவமைகள் 423


சாயம் போன சோலை போல.
சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை போல.
சித்திரப் பதுமை போல.
சிவ பூசை வேளையில் கரை புகுந்தாற் போல.
சிறகு இழந்த பறவை போல.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தாற் போல.
சூரியனைக் கண்ட பனி போல.
செத்தவன் வாய்க்கு வெற்றிலைபாக்குக் கொடுத்தது போல.
செவிடன் காதில் சங்கு ஊதினார் போல.
சேற்றிலே பிறந்த செந்தாமரை போல.
சொன்னது சொல்லும் கிளிப்பிள்ளை போல.



தயிர் கடையும்போது தாழி உடைந்தாற் போல.
தங்கப் பதுமைக்குப் பொட்டு இட்டாற் போல.
தாயைக் கண்ட சேயைப் போல.
தாமரை இலைமேல் தண்ணீர் போல.
திருடனைத் தேள் கொட்டினது போல.
தென்றல் முற்றிப் பெருங் காற்றானாற் போல.
தோன்றி மறையும் வானவில் போல.



நகமும் சதையும் போல.
நத்தைக்குள் முத்துப் பிறந்தாற் போல.
நடுக்கடலில் கலம் கவிழ்ந்தாற் போல.
நாண் அறுந்த வில் போல.