பக்கம் எண் :

424நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


நாண் வழிக் காசு போல.
நாய்க்குக் கிடைத்த தெங்கம்பழம் போல.
நீர்க்குள் பாசி போல.
நீர் மேல் எழுத்துப் போல.
நீர் வழி மிதவை போல.
நீர் பூத்த நெருப்புப் போல (உணர்ச்சி மறைந்திருக்கிறது.)
(நீறு-சாம்பல்)
நெருப்பாறும் மயிர்ப் பாலமும் போல.



பசுமரத்து ஆணி போல.
பன்றி முன் முத்துக்களைக் கொட்டினாற் போல.
பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல.
பசுத்தோல் போர்த்த புலி போல.
பறை ஓசை கேட்ட அசுணப்புள் போல.
பசுமண் கலத்துள் தண்ணீர் போல.
பள்ளத்தில் பாயும் வெள்ளம் போல.
பாதிக் கிணறு தாண்டுவது போல (இருக்கிறது இவன் செயல்.)
பாம்பின் வாயில் அகப்பட்ட தேரை போல.
பாம்பும் கீரியும் போல.
பாம்புக்குப் பால் வார்த்தாற் போல.
பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது போல.
புயலில் சிக்கிய பூங்கொடி போல (நடுங்கினாள்.)
புலியிடம் தப்பிப் பூதத்தினிடம் அகப்பட்டாற் போல.
புற்றிலிருக்கும் பாம்பென (ச் சீறி.)
புற்றீசல் போல.