பக்கம் எண் :

உவமைகள் 425


பூனையைக் கண்ட கிளி போல.
பூவுடன் கூடிய நாரும் மணம் பெற்றாற் போல.
பூவும் மணமும் போல.
பெட்டியிலிருக்கும் பாம்பென (அடங்கி.)



மழையை எதிர்பார்க்கும் பயிர் போல.
மணியும் ஒளியும் போல.
மத்தில் அகப்பட்ட தயிர் போல (மனம் உடைந்தது.)
மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் போல.
மணற் சோற்றில் கல் ஆய்வது போல.
மது உண்ட குரங்கு போல.
மலையைக் கல்லி எலி பிடிப்பது போல.
மதில் மேல் இருக்கும் பூனை போல.
மதியிலா வானம் போலவும் தாமரை இல்லாத் தடாகம் போலவும்.
மதம் கொண்ட யானை போல.
மதியிலா வானம் போலவும் தாமரை இல்லாத் தடாகம் போலவும்.
மதம் கொண்ட யானை போல.
மலடி வயிற்று மகன் போல.
மலை மேலிட்ட விளக்குப் போல.
மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினது போல.
மான் கூட்டத்தில் புகுந்த பெரும்புலி போல.
மாலுமி இல்லாத மரக்கலம் போல.
முடவன் பொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல.
முழுப் பூச்சுணைக்காயைச் சோற்றில் மறைத்தாற் போல.



யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல.