பக்கம் எண் :

426நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


வயிற்றுப் பிள்ளையை நம்பிக் கைப்பிள்ளையை ஆற்றில்
நழுவ விட்டாற் போல.
வலையில் அகப்பட்ட மான் போல.
வள்ளியும் முருகனும் போல (மணமக்கள் வாழி.)
வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல.
விளக்கைக் கண்ட விட்டில் பூச்சி போல.
விண் மீன் நடுவில் விளங்கிடும் வெண்மதி போல.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல.
வெண்கலக் கடையில் யானை புகுந்தாற் போல.
வெயிலில் அகப்பட்ட புழுப் போல.
வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவான் போல.
வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்தாற்போல.
வேலியே பயிரே மேய்ந்தாற் போல.
வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற்போல.
(வேலால் குத்துப்படத் தேள்கடித்தது நீங்கியது போல)