மெய்யெழுத்து (Consonants)
வல்லினம் (Hard Consonants) : க், ச், ட், த், ப், ற்.
வலிய ஒலியுடையதால் இவற்றை வல்லின மெய் என்கிறோம்.
மெல்லினம் (Soft Consonatns) : ங், ஞ், ண், ந்,ம், ன்,
மென்மையான ஒலியுடையதால் இவற்றை மெல்லின மெய்
என்கிறோம்.
இடையினம் (Medial Consonants) : ய்,ர், ல், வ், ழ், ள,்
வல்லினம் மெல்லினம் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட
ஒலியுடையதால் இவற்றை இடையின மெய் என்கிறோம்.
ஆனால், இவ்விடையின மெய்கள் என்பவை உண்மையில்
உயிரெழுத்துகளுக்கும் மெய்யெழுத்துகளுக்கும் இடைப்பட்ட
ஒலியுடைய எழுத்துகள் என்று கூறுவதே பொருத்தம்
உயிர் மெய்யெழுத்து (Vowel Consontants)
உயிர் மெய்யெழுத்துகள் என்பவை உயிரும் மெய்யும்
சேர்ந்த எழுத்துகள்.
உயிர் மெய்யெழுத்திலும் குறில் நெடில்கள் உண்டு.
க - குறில, கா - நெடில். உயிர் மெய்யெழுத்துகளையும் குறில்
நெடில் வேறுபாடு அறிந்து எழுத வேண்டும். தொல் என்பதற்கும்
தோல் என்பதற்கும் மிகுந்த வேறுபாடு இருப்பதைக் காண்க.
தொல்காப்பியம் என்பதைத் தோல்காப்பியம் என்று எழுதினால
நகைப்பார்கள்.
க் + அ = க. இது வல்லின உயிர் மெய்.
ம் + அ = ம. இது மெல்லின உயிர் மெய்.
ல் + அ = ல. இஃது இடையின உயிர் மெய்.
உயிர்மெய்யினும் இம்மூவினம் உண்டு என்பதறிக.
|