உயிரெழுத்து
(Vowels)
உயிரெழுத்துகளில் குற்றெழுத்து உண்டு; நெட்டெழுத்து
உண்டு; சுட்டெழுத்து உண்டு; வினா எழுத்து உண்டு. வினா
எழுத்தில் உயிர்மெய்யெழுத்தாகிய யா என்னும் எழுத்தும்
இனம் குறித்துச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதறிக.
குற்றெழுத்து (Short Vowels) : அ, இ, உ, எ, ஒ
குற்றெழுத்து என்பது குறுகிய ஒலியுடைய எழுத்து,
குற்றெழுத்தைக் குறில் என்றும் கூறுவர்.
நெட்டெழுத்து (Long Vowels) : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள.
நெட்டெழுத்து என்பது நீண்ட ஒலியுடைய எழுத்து.
நெட்டெழுத்தை நெடில் என்றும் சொல்லுவர்.
குறிப்பு : உயிர்க்குறில், உயிர்நெடில் இவற்றின்
வேறுபாட்டை யாரும் புறக்கணித்தல் கூடாது. இவ்வேறுபாட்டை
நன்கறிய வேண்டும். அல்-இருள், ஆல்-ஆலமரம், இவ்வேறுபாடு
அறிந்து எழுதாவிட்டால் பொருளே மாறுபடும்.
சுட்டெழுத்து (Demonstrative Letters) : அ, இ, உ,,
சுட்டிக்காட்டுவது சுட்டெழுத்து.
அப்பக்கம், இப்பக்கம், உப்பக்கம்.
வினா எழுது (Interrogative Letters) : எ, ஏ, ஆ, ஓ, யா,
வினாவுவது வினா எழுத்து.
எவன்? ஏது? அவனா? அவனோ? யாது?
குறிப்பு : தமிழி்ல் வினா அமைப்பது மிகவும் எளிது.
இது தமிழுக்குள்ள சிறப்புகளுள் ஒன்றாகும்.
வருவான் + ஆ = வருவானா?
கேட்பாய் + ஆ = கேட்பாயா?
கொடுத்தேன் + ஓ = கொடுத்தேனோ?
எடுத்தாய் + ஓ = எடுத்தாயோ?
ஆங்கிலத்தில் வினா அமைப்பது
கடினமானது.
|