பக்கம் எண் :

40நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

5.1 எழுத்தியல் (Orthography - on Letters)

எழுத்து
(Tami Alphabet)

மானிடன் எப்படி எப்பொழுது பேசக் கற்றுக்
கொண்டான் என்பது இன்னும் கண்டறிய முடியாத
மறைபொருளாய் இருக்கிறது. நாகரிகம் வளர வளர
அவன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க வேண்டிய
இன்றியமையாமை ஏற்பட்டதால், மொழியைக் கண்டு
பிடித்தான். ஒருவருக்கொருவர் கருத்தை வெளியிடுவதற்குக்
கருவியாயிருப்பது மொழி. நாகரிகம் மேலும் வளரவே தன்
அனுபவத்தை எழுதி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்ட
போது, அவன் எழுத்தைக் கண்டு பிடித்தான். தமிழ்மொழியில்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே எழுத்து உண்டாயிற்று,
அந்த எழுத்துகளிலும் நாளடைவில் மாறுபாடுகள் தோன்றலாயின.

மொழி சொற்களால் ஆனது. சொல் எழுத்தால் ஆனது.
ஆதலால், எழுத்தே சொல்லுக்கு அடிப்படை.

எழுத்தாவது யாது? மொழி உண்டாவதற்குக் காரணமான
ஒலிக்கூட்டமே எழுத்து. அவ்வெழுத்து ஒலி வடிவம் என்றும்,
வரி வடிவம் என்றும் இருவகைப்படும். வரி வடிவம் என்பது
எழுதும் எழுத்து.

தமிழெழுத்து நான்கு வகைப்படும்.

உயிரெழுத்து (Vowels)
மெய்யெழுத்து(
Consonants)
உயிர் மெய்யெழுத்து (
Vowel Consonants)
ஆய்த எழுத்து

12
18
216
1

-------
247
-------