பக்கம் எண் :

442நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


38.
வாழ்க்கை வரலாறு எழுதும் முறை

‘மானிடரைப் பற்றி அறிதலே மாண்பு மிக்க கல்வி’ என்றார்
ஆங்கிலக் கவிஞர் போப். கல்வியில் வாழ்க்கை வரலாறு கற்பது
முதன்மையான இடம் பெறுதல் வேண்டும் என்பதே போப் என்பாரின்
கருத்து எனலாம். உண்மையில் கற்பனையின்றி நல்ல முறையில்
இயற்றப்பட்ட வாழ்க்கை வரலாறு கற்பார்க்கு உற்றுழி உதவும் ஊன்று
கோலாக மட்டும் இருப்பதல்லாது, வேண்டும் பொழுது வழி காட்டும்
கலங்கரை விளக்காகவும் இயங்கும் என்பதில் ஐயமில்லை. நாட்டு
முன்னேற்றத்துக்கு நல்ல உண்மையான வாழ்க்கை வரலாறுகள் நிரம்ப
வெளி வருதல் வேண்டும். ‘முற்பிறப்பில் செய்த நற்றவப் பயனால்
இப்பிறப்பில் ஓதாது, கற்பன எல்லாம் முற்றும் கற்றார்’ என்று கூறும்
வரலாறுகள் நாட்டுக்கு நன்மை செய்யா என்று கூற வேண்டுவதில்லை.
எப்படி ஒருவர் கல்வி கற்றார், எவ்வழிகளில் ஒருவர் முயன்று
கவிஞரானார், எவ்வாறு ஒருவர் முயற்சி செய்து செல்வரானார்,
எவ்வகையில் ஒருவர் நாட்டுக்குத் தொண்டு செய்தார், ஒருவர்
எத்தகைய பண்புகள் கொண்டிருந்தார் என்பன போன்ற குறிப்புகள்
வாழ்க்கை வரலாற்றில் காணப்படுமாயின், அவை கற்பார்க்கும்
கொள்ளத்தக்கனவாகவோ தள்ளத்தக்கனவாகவோ இருத்தல்
கூடும்.

தமிழ் மொழியில் வந்துள்ள வாழ்க்கை வரலாறுகள்
பெரும்பாலான உண்மையானவைகளாக இல்லாமலிருப்பது கண்கூடு.
நம் முன்னோர்கள் தங்கள் வரலாறுகளைப் பின்னோர் அறிய
விரும்பாதிருந்ததே, உண்மை வாழ்க்கை வரலாறுகள் நாட்டில்
தோன்றாமைக்கு முதன்மையான காரணமாகும். நாயன்மார்கள்