பக்கம் எண் :

சிறுகதை எழுதுதல் 441


சிறுகதைகளை எழுதிப் பயில வேண்டும். சிறுகதை எழுதுவது
கடினமானது. அது சிலர்க்கே கைவரப்பெற்றது. கவிதையானது
கவிஞனது சிந்தனையிலிருந்து ஊற்றெடுத்துத் தோன்றுவது போன்று
சிறுகதையும் எழுத்தாளன் சிந்தனையினின்று உருவாகிறது. சிறுகதை
எழுத்தாளர்களை உரைநடைக் கவிஞர்கள் என்று கூடச் சொல்லலாம்.
எழுத்தாளர்கள் நல்ல தமிழில் பிழையின்றிச் சிறுகதைகளை
எழுதினாலன்றி அவை அறிஞர் மதிப்பையும் பாராட்டையும் அடைய
முடியாமல் அழிந்தொழியும் என்பதை என்றும் நினைவில் வைப்பார்களாக!