பக்கம் எண் :

440நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

நீதிச் சிறுகதைகள் மிகுதியாக எழுதப்பட்டுவிட்டன. அவை
சுவையுள்ளனவாக இரா. திறமையுள்ளவர்கள். துப்பறியும் சிறுகதைகள்
எழுதலாம். கதை எழுதத் திட்டமான விதி எதுவும் இல்லை. மக்கள்
மனப்பான்மை அறிந்து சிறுகதைகள் எழுத வேண்டும். நம்
நாட்டுக்குச் சீர்த்திருத்தக் கதைகள் இயற்கைக்கு மாறுபடாமல்
உள்ள நிலையில் தோன்ற வேண்டும்.

பெண்களுக்கு உணர்ச்சிக் குழப்பத்திலிருந்து மன அமைதி
பெறும் ஒரு பெண்ணின் கதை வேண்டும். பெண்களுக்கு மிகுந்த
கதைப் பின்னல் தேவையில்லை. கதை மாந்தர்கள் அனுதாபம்
உள்ளவர்களாயிருப்பது போதுமானது. கதை, உணர்ச்சியோடும்
திறமையோடும் எழுதப்பட வேண்டும். நகைச்சுவை அமைந்து
உள்ள சிறுகதைகள் பெண்களுக்கு மிகவும் விருப்பமானவை.

தொழிற்சாலை, கடை, அலுவலகம் இவைபற்றிச் சிறுகதைகள்
எழுதலாம். வறுமையின் கடுமையை எடுத்துக் காட்டும் கதைகளும்,
விதியையே நம்பிக் கெட்டவர்கள் கதைகளும் நம் நாட்டுக்கு இன்றைய
நிலையில் வேண்டுவனவாகும். எந்தக் கதை எழுதினாலும் மானிடப்
பண்பைச் சித்தரிப்பதை முக்கியமாகக் கருத வேண்டும். சிறுகதை
எழுத்தாளர்கள் கதை மாந்தர்களின் மனத்தில் விளையும் விளைவு
வெளிப்படுமாறு கதைகள் அமைத்தலை மனதில் கொள்ள
வேண்டும்.

இனிய மொழி நடையில் சில சிறுகதைகள், கதைப் பின்னல்
இல்லாவிடினும், உள்ளத்தைக் கவரும். இத்தகைய கதைகளை எழுத
வல்லவர்கள் தலைசிறந்த இலக்கிய எழுத்தாளர்கள். காண்டேகருடைய
சிறுகதைகள் இத்தன்மையன எனலாம்.

இக் குறிப்புகளைத் தெரிந்த கொண்டு ஒருவர் திறம்படச்
சிறுகதை எழுதிவிடல் முடியாது. தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்கள்
எழுதிய கதைகள் பலவற்றை நன்கு படித்துப் படித்துச்