|
அவன்தான் - தான் -
இடைச்சொல்
அவனேநல்லவன் - ஏ - இடைச்சொல்
அண்ணனும் தம்பியும் - உம் - இடைச்சொல்
அண்ணனும் தம்பியும் என்னும் தொடரிலிருக்கும் உம்மைகள்
எண்ணப்படுவதால் எண்ணும்மை எனப்படும்.
பூனையோ நாயோ வந்தது - ஓகாரம்
இடைச்சொல்.
இந்த ஓகாரம், சந்தேகமான கருத்தைக் கொடுப்பதால் ஐய
ஓகாரம் எனப்படும்.
4. உரிச்சொல் (Poetical Words)
உரிச்சொல்லாவது பெயர்
வினைகளுக்கு உரிமை பூண்டு வருவது.
சில உரிச்சொற்கள் பல பொருளைக் குறிக்கும். ஒரே பொருளைக் குறித்தும்
பல உரிச்சொற்கள் வருவதும் உண்டு. தொல்காப்பிய
உரையாசிரியரான
சேனாவரையர் பெரும்பாலும் செய்யுட்கே உரியனவாய் வருதலின்
உரிச்சொல்லாயிற்று என்பாரும் உளர் என்றார். மற்ற
விளக்கத்துடன்
கூறியதை மேற் கொண்டு எளிதாக விளக்குமாறு செய்யுளுக்கே உரிய
சொல் உரிச்சொல்லென விளக்கினார்.
சால உண்டான். சால - உரிச்சொல்.
நன்று மழை பெய்தது. மழை மிகவும்
பெய்தது என்று
பொருள் தரும்போது நன்று என்பது உரிச்சொல். பெரும்பாலும்
செய்யுளுக்கே உரிய சொல்லாக இருப்பதால் உரிச்சொல் என்றார்
நன்னூலார். இயல்பான பொருளுக்கு இது வேறான பொருளைத்
தருவதாகவும் இருக்கும்.
சால, உறு, தவ, நனி, கூர், கழி -
உரிச்சொற்கள்.
அறுசீர்க் கழி நெடில் ஆசிரிய
விருத்தம்.
இங்கு உள்ள கழி - உரிச்சொல்
பல பொருள் தரும் உரிச்சொல்.
|