பக்கம் எண் :

56நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

காப்பு - கடிநகர்
கூர்மை - கடிவேல்
மணம் - கடிமாலை
விளக்கம் - கடிமார்பன்
அச்சம் - கடிப்போர்
சிறப்பு - கடியரண்
விரைவு - கடிசென்றான்
மிகுதி - கடிகாற்று
புதுமை - கடிமணம்
ஆர்த்தல் - கடிமுரசு

இலக்கிய வகை
இயற்சொல்
(Easy and Pure Tamil Words)

இயல்பாயும் எளிதாயும் இருக்குஞ் சொல் இயற்சொல் எனப்படும்.

போனான், கிளி.

திரிசொல்
(Hard and Pure Tamil Words)

கடினமான சொல் திரிசொல் எனப்படும்.

படர்ந்தான், கிள்ளை. (படர்ந்தான் - சென்றான்; கிள்ளை - கிளி,)

வடசொல்
(Sanskrit Works)

சமஸ்கிருத மொழியின் சொல் தமிழி்ல் வந்து வழங்குவது
வடசொல் எனப்படும்.

தமிழ் மொழியில் வந்து வழங்கும் வடமொழிச் சொற்களுள் சில,
யாதொரு வேறுபாடும் அடையாமலே வழங்கும்; சில யாதேனும்
வேறுபாட்டை அடைந்து வழங்கும். வேறுபாடு அடையாத வடசொல்
தற்சம வடசொல் எனப்படும். [தற்சமம் - அதற்கு (வடசொற்கு)ச்
சமமானது,] வேறுபாடு அடைந்த வடசொல் தற்பவம் எனப்படும்.
[தற்பவம் - அதனின்று (வடசொல்லினின்று) பிறந்தது,]

தற்சம வடசொல்

விளக்கமாகக் கூறினால் வடமொழிக்கும் தமி்ழ் மொழிக்கும்
பொதுவான எழுத்தால் அமைந்த வடசொல் தமிழில் வந்து வழங்குவது
தற்சம வடசொல்லாகும்.