பக்கம் எண் :

சொல்லியல்57

கமலம், காரணம், குங்குமம், வசனம், சரணம், உத்தரம், பரமன்,
வீரன், வரன், விமானம்.

தற்பவ வடசொல்

வடமொழிக்குரிய சிறப்பெழுத்துகளாலும், இரு மொழிகளுக்குரிய
பொது எழுத்துகளாலும் அமைந்த வடசொல் தற்பவ வடசொல், வட
சொற்களைத் தமிழில் எழுதும் பொழுது தமிழினிமைக்கு ஏற்றவாறு சில
வடமொழி எழுத்துகளுக்கு ஈடாகத்தமிழெழுத்தை எழுதுவது வழக்கம்.

ஜ - இது மொழிக்கு முதலில் ‘ச’ ஆகவும், மொழிக்கு இடையில்
‘ச’ அல்லது ‘ய’ ஆகவும் மாறும்.

மொழி முதல்
ஜகந்நாதன் - சகந்நாதன்
ஜயம் - சயம்
ஜலம் - சலம்
ஜோதி - சோதி
மொழியிடை
விஜயமாதேவி - விசயமாதேவி
கஜம் - கசம்
அம்புஜம் - அம்புயம்
பங்கஜம் - பங்கயம்

ஷ - இது மொழிக்கு முதலில் ‘ச’ ஆகவும், மொழிக்கு இடையில்
‘ட’ ஆகவும் மாறும்.

மொழி முதல்
ஷண்முகம் - சண்முகம்
ஷஷ்டி -சட்டி
மொழியிடை
வேஷம் - வேடம்
நஷ்டம் - நட்டம்

க்ஷ - இது மொழிக்கு முதலில் ‘க’ ஆகவும். ‘ச’ ஆகவும்,
மொழிக்கு இடயில் ‘க்க’ ஆகவும் ‘ச்ச’ ஆகவும். ‘ட்ச’ ஆகவும் மாறும்.

மொழி முதல்
க்ஷணம் - கணம்
க்ஷீரம் - சீரம்
க்ஷேமம் - சேமம்
மொழியிடை
தக்ஷிணம் - தக்கணம்
பிக்ஷை - பிச்சை
பக்ஷி - பட்சி