|
ஸ - இது மொழிக்கு முதலில் ‘ச’ ஆகவும், ‘அ’ ஆகவும்
மொழிக்கு இடையில் ‘ச’ ஆகவும், ‘த’ ஆகவும் மாறும்.
மொழி முதல்
ஸங்கதி - சங்கதி
ஸமயம் - சமயம்
- அமயம்
ஸர்ப்பம்- சர்ப்பம் |
மொழியிடை
சரஸ்வதி - சரசுவதி
தாஸன் - தாசன்
மாஸம் - மாசம்
- மாதம் |
ஹ - இது மொழி முதலில் தன்மேல் நின்ற உயிரெழுத்தாகவும்,
மொழியிடையில் ‘க’ ஆகவும் மாறும்.
மொழி முதல்
ஹரன் - அரன்
ஹோமம் - ஒமம் |
மொழியிடை
தேஹம் - தேகம்
மஹிமை - மகிமை |
வடமொழியில் `ய` முதலில் வந்தால் தமிழில் இகரம் சேர்ந்து
எழுதுவதும், யகரத்திற்கு ஈடாக `எ` வருவதும் மரபு.
யக்ஷன்- இயக்கன்
யமன் - எமன்,
- இயமன். |
யந்திரம் - இயந்திரம்,
- எந்திரம்,
|
மேற்குறித்தவற்றால் சில
வடசொற்களைத் தமிழில் எழுதும்
மரபைத் தெரிந்து கொள்ளலாம். புஸ்தகம் என்னும் வடசொல்லை
அப்படியே எழுதுவது ஒரு முறை. அதைப் புத்தகம் என்று
தமிழினிமைக்கு ஏற்றவாறு மாற்றி எழுதுவது வேறொரு முறையாகும்.
புத்தகம் என்பதற்குத் தமிழ்ச் சொல்லாக ஏடு என்று எழுதலாம்.
பாஷை என்பதைப் பாடை என்று எழுதியிருப்பதைக் காணலாம். மொழி
என்று எழுதுவதே நல்லது. பாஷையைப் பாடையாக்குவது போலி
அன்று என்றும், வடசொற்களைத் தமிழில் மாற்றி
எழுதுவதாகும் என்றும்
அறிக.
|