பக்கம் எண் :

சொல்லியல்59


திசைச்சொல் (Foreign or Loan Words)

வேறு திசையிலிருந்து தமிழில் பல காரணங்களால் வந்து வழங்குஞ்
சொல் திசைச்சொல் எனப்படும். திசைச் சொற்கள் பிற நாடுகளிலிருந்து
தமிழில் வந்து வழங்குபவை.

அரபுச்சொல் - அத்தர், அபின், அமல், கறார், பாக்கி, மஹஜர்.
இந்துஸ்தானி - இஸ்திரி, கச்சேரி, கிச்சடி, சட்னி, ரூபாய். (ரூப்யா)
பார்ஸி - ஹௌல்தார், ருமால், குல்லா, பஜார்.
ஆங்கிலம் - ஆபீஸ், இன்ஸ்பெக்டர், டயர், பென்ஸில், பேனா.