5.3
பெயர் வகைகள்
பெயர்ச்சொல் (Noun)
பொருளை உணர்த்தி வேற்றுமை உருபுகளை ஏற்க நிற்பது
பெயர்ச்சொல். வினையாலணையும் பெயர் தவிர மற்றைய பெயர்ச்
சொற்கள் காலம் காட்டா என்பதறிக.
பெயர், இடுகுறியாகவோ காரணமுடையதாகவோ இருக்கும்.
இடுகுறிப்பெயர் (Arbitrary Noun)
காரணம் இல்லாமல் முன்னோர் இட்ட பெயரே இடுகுறிப்பெயர்.
கல், மண்
காரணப் பெயர் (Derivative Noun)
காரணம் குறித்து வருவது
காரணப் பெயர்.
|
வயிறு
|
(வாயின் இறுதி)
|
|
சுவர்
|
(தோள் போல் இருப்பது, சுவல் -
தோள், சுவர் - போலி)
|
|
மரம்
|
(தரையுடன் மருவியிருப்பது)
|
|
கும்மி
|
(குழுமியடிப்பது)
|
|
குறிச்சி
|
(குறிஞ்சி நிலத்தில்
அஃதாவது மலைப்பகுதியில்
இருக்கும் ஊர்)
|
|
ஒத்திகை
|
(ஒத்து இருக்கை)
|
|
விலங்கு
|
(முதுகெலும்பு குறுக்கே இருப்பது)
|
|