பக்கம் எண் :

பெயர் வகைகள் 87


பிரித்துக் கூட்டலிற் குழுவாகும் பொருளிலும், ஒரு தொழிற்காலத்தைக்
குறிக்கும் பிறிது தொழிலாகும் பொருளிலும் வரும்.

குறில் ஐந்தனுள் அ, இ, உ.
இம்மூன்றும் சுட்டு.
பஞ்சபாண்டவருள்
தருமனே சிறந்தவன்.
கூட்டிப் பிரிக்கும் எல்லைப்
பொருள்.
வாழ்வாங்கு வாழ்பவன்
தேவருள் வைக்கப்படுவான்.
கல்வியறிவில்லாதவன்
விலங்கினுள் வைத்
தெண்ணப்படுவான்.
பிரித்துக் கூட்டும் குழுப்
பொருள்.
பால் கறக்கையில் வந்தான்.
போர் செய்கையில் மழை
வந்தது.
ஒரு தொழிற் காலத்தைக்
குறிக்கும் பிறிது தொழில்.

குறிப்பு : கூட்டிப் பிரிக்கும் எல்லைப் பொருளிலும் பிரித்துக்
கூட்டும் குழுப் பொருளிலும் ‘உள்’ உருபு வருதல் வேண்டும்.

ஐந்தாம் வேற்றுமை இல் உருபு ஒப்புப் பொருளிலாவது ஏதுப்
பொருளிலாவது வரும். ஏழாம் வேற்றுமை இல் உருபு இடப்பொருளில்
மட்டுமே வரும். இந்த வேறுபாட்டை நன்கறிக.

எட்டாம் வேற்றுமை

எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என்பர். இதன்
பொருள் விளிப்பதுதான்; படர்க்கையோரைத் தன் முகமாகத் தான்
அழைப்பதுவேயாகும். இவ்வேற்றுமைக்கு உருபுகள் இல்லை;
சொல்லில் மாற்றங்கள் ஏற்படும். இவ்விளியானது அண்மை விளி
என்றும், சேய்மை விளி என்றும் இருவகைப்படும். அண்மை விளி
அருகி்ல் இருப்போரை அழைப்பது. சேய்மை விளி என்பது தொலைவில்
உள்ளவரை அழைப்பது.