பக்கம் எண் :

86நல்ல தமிழ் எழுத வேண்டுமா?

சாத்தனுடைய புதல்வன். சாத்தனுடைய புதல்வர்.

சாத்தனுடைய வீடு. சாத்தனுடைய வீடுகள்

என வரும்" என்று சான்றுகள் கொடுத்துக் குறிப்பிட்டுள்ளார். நன்னூல்
உரையாசிரியர்களான வை.மு. சடகோபராமானுஜாச்
சாரியாரும்,வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரும் இக்கருத்தை
ஏற்றுக் கொண்டு, தமது நன்னூல் காண்டிகை உரையில் அவ்வாறே
குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம். ‘பழையன கழிதலும் புதியன
புகுதலும் வழுவல காலவகையினானே’ என்னும் பவணந்தி முனிவர்
கொள்கைப்படி நாமும் காலத்துக்கு ஏற்ற மாற்றத்தை ஏற்றுக்
கொள்வது பொருத்தமாகும். இலக்கணமும் காலத்துக்குக் காலம் மாறி
வருவது கண்கூடு. மாறி வருவதுதான் வளரும் இலக்கணத்திற்கு அறிகுறி;
வாழும் இலககணத்திற்கும் அடையாளம்.

மேலும் தசரதரின் மகன் இராமன் என்று எழுதுவதைக்
காண்கிறோம். இலக்கண அறிஞர்கள் ‘இன்’ என்பதைச் சாரியை
என்பர். அப்படிச் சொல்ல வேண்டுவதில்லை. இக்காலத்தில் இந்த
‘இன்’ உருபை ஆறாம் வேற்றுமை உருபாகவே கொள்ளலாம்.

ஏழாம் வேற்றுமை

ஏழாம் வேற்றுமை உருபுகள், கண், கால், கடை, இடை, முன், பின்,
மேல், கீழ், புறம், உள், இல் அகம், தலை, வாய், திசை, உழி, வழி,
பால் முதலியனவாகும். இவ்வேற்றுமைக்குரிய ஒரே பொருள்
இடப்பொருளாகும்.

பெட்டியில் அணிகலம் -
இருக்கிறது.
இல் - இடப்பொருளில் வந்தது.
என்பால் வந்தான் - பால் - இடப்பொருளில் வந்தது.

சிறுபான்மை ஏழனுருபுகள் கூட்டிப் பிரித்தற்கு எல்லையாகும்.
பொருளிலும்,