பக்கம் எண் :

பெயர் வகைகள் 85

அஃறிணை ஓருமை பன்மைகளுக்கு இயைந்த அது, உடைய
என்னும் ஆறன் உருபுகள் உயர்திணைக்குப் பொருந்தா என்று
இலக்கணம் கூறுகிறது. உயர்திணைப் பெயர் வரும்போது கண்ணனுக்கு
மகன் கந்தன் என்று நான்கன் உருபே வருதல் வேண்டும். கண்ணனுடைய
மகன் கந்தன் என்று எழுதுதல் கூடாது என்று இலக்கண அறிஞர்கள்
குறிப்பிட்டுள்ளார்கள். திருமண அழைப்புகளில் ‘என்னுடைய மூத்த மகன்’
என்று பெருவாரியாக எழுதப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ‘என் மூத்த
மகன்’ என்றால் பிழையாகாது. இப்படிச் சொன்னதற்குக் காரணம்
உயர்திணையை அஃறிணையான உடைமைப் பொருளாக்குதல் கூடாது
என்பதாகும். ‘என்னுடைய மகன்’, ‘என்னுடைய மனைவி’ என்று
எழுதும்போது மகனையும் மனைவியையும் அஃறிணை உடைமைப்
பொருளாகச் செய்வதாகவும் இலக்கண அறிஞர்கள் கருதினார்கள்.
வரலாறு எழுதும்போது அவன் சிற்றப்பன் மகன் முத்தப்பன் என்று
குறிப்பிட்டால் விளக்கம் ஏற்படுவதில்லை. ஆதலால், இக்காலத்தில்
முறைமைப் பொருளுக்கும் ஆறாம் வேற்றுமை உருபு பயன்படுகிறது.
நம் முன்னோர்களுள் சிலர் ஆறாம் வேற்றுமை உருபை முறைப்
பொருளில் பயன் படுத்தியிருப்பதைக் கீழே காண்க.

‘அரனது தோழன்’

‘குன்றவர் தமது செம்மல்’

‘நினது அடியாரோடல்லால்’

புகழ் பெற்ற ஆறுமுக நாவலர் இச்சான்றுகளைத் தமது
நன்னூற் காண்டிகையில் எடுத்துக்காட்டி, ‘அது’ என்னும் உருபு
உயர்திணை ஒருமைப் பொருண்மைக்கும் உயர்திணைப் பன்மைப்
பொருண்மைக்கும், எனது கைகள் என அஃறிணைப் பன்மைப்
பொருண்மைக்கும் சிறுபான்மை வரும் என்று கூறியுள்ளார். மேலும்
அவரே,

"இவ்வாறன் உருபுகளுள் ஒன்று நிற்றற்குரிய இடத்தே ‘உடைய’
என்பது சொல்லுருபாக வரும்.