பரதன் நல்லன் என்று பொருள் கொண்டால் உறழ் பொருவு
(Comparative
Degree) ஆகும்.
வீ்ட்டினின்று போனான் - நின்று - நீங்கல் பொருள்
வீட்டிலிருந்து போனான்- இருந்து - நீங்கல் பொருள்
ஆறாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை உருபுகள் அது, ஆது, அ, உடைய
என்பவை.
இவற்றுள் அது, ஆது என்னும் இரண்டு உருபுகளும், அஃறிணை
ஓருமைப் பெயரையும், அ என்பது அஃறிணைப் பன்மைப் பெயரையும்,
உடைய என்னும் சொல்லுருபு அஃறிணை ஒருமை பன்மை ஆகிய
இருபெயர்களையும் கொண்டு முடியும்; உயர்திணை ஒருமை
பன்மைப்பெயர்களைக்கொண்டு முடியா. இவ்வேற்றுமைக்குரிய பொருள்
உடைமை ஒன்றேயாகும்.
எனது கை
எனாது கை |
அது, ஆது என்னும் உருபுகள்
ஒருமைப் பெயரைக் கொண்டு
முடிந்தன. ஆது என்னும் உருபு
செய்யுளில் வரும்.
|
என கைகள்
என பொருள்கள்
|
அ உருபு
பன்மைப் பெயர் கொண்டு
முடிந்தது.
|
என்னுடைய கை
என்னுடைய கைகள்
|
உடைய
என்னும் உருபு ஒருமைக்கும்
பன்மைக்கும் பொதுவாக வரும்.
|
குறிப்பு : `பாம்பறியும் பாம்பின் கால்` என்பது பழமொழி.
பாம்பறியும் பாம்பினுடைய கால்களை என்பது இப்பழமொழியினது
பொருள். அ என்பது ஆறாம் வேற்றுமை உருபு. கால் என்பதற்குக்
கால்கள் என்று பொருள் கொள்ளுதல் வேண்டும்.
எனது உயிர் என்னும்போது உயிர் அஃறிணையாய்க் கருதப்படுகிறது
என்க. மனித உடலும் உயிரும் ஒன்றுபட்டிருப்பது உயர் திணையாகும்.
உயிரைத் தனியாகவும் உடலைத் தனியாகவும் கூறும்போது அவை
அஃறிணையாகவே கருதப்படும்.
|