|
குறிப்பு : கூலிக்காக என்பதில் ‘கு’ என்பது சாரியை. ‘ஆக’
என்பது சொல்லுருபு.
ஐந்தாம் வேற்றுமை
இதன் உருபுகள் இன், இல், இருந்து, நின்று, காட்டிலும்,
பார்க்கிலும் என்பவை. இவ்வைந்தாம் வேற்றுமைக்குரிய பொருள்கள்
எல்லை, எது, ஒப்பு, நீங்கல் ஆகியவை.
தமிழ்நாட்டின் வடக்கு,திருத்தணிகை
மலை -
|
எல்லை
(Boundary) |
|
செல்வத்தில் சிறந்ததுஅமெரிக்க
நாடு -
|
ஏது (காரணம்)
(Cause) |
| இராமனில்
பரதன் நல்லன் -
|
ஒப்பு
|
| இராமனைக்
காட்டிலும் பரதன்நல்லன் -
|
உறழ்ச்சி
|
| மலையினின்று
வீழ் அருவி -
|
நீங்கல்
|
| வீட்டிலிருந்து போனான் -
|
நீங்கல்
|
எல்லைப் பொருளாவது அறியப்படாத பொருளினது திசையளவு,
வழியளவு, கால அளவு, பண்பு அளவு முதலியவற்றைக்
குறிப்பிடுதற்கு
எல்லையாக நிற்கும் பொருளாகும்.
எல்லைப் பொருள் ‘மதுரையின் வடக்குச் சிதம்பரம்’ எனத்
திசையளவும், ‘கச்சியில் திருத்தணிகை முக்காவதம்’ என வழியளவும்,
‘சம்பந்தரில் பல ஆண்டு மூத்தவர் நாவுக்கரசர்’ எனக் கால அளவும்,
‘அரசரிற் பெரியவர் முனிவர்’ எனப் பண்பளவும்
முதலியன பற்றி வரும்.
இராமனில் பரதன் நல்லன்
என்னும் வாக்கியத்தில் இராமனைப்
போலப் பரதன் நல்லன் என்று பொருள் கொண்டால் ஒப்புப் பொருள்
(Positive Degree) ஆகும்.
இராமனைவிடப்
|