பக்கம் எண் :

82நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


நாயோடு நம்பி வந்தான் என்றோ, தம்பியொடு அண்ணன் வந்தான்
என்றோ எழுதுதல் கூடாது என்று கூறியுள்ளார். அதனால் அவர்
‘ஒருவினை ஒடுச்சொல் உயர்பின் வழித்தே` (தொல், சொல். நூற்பா 91)
என்றார். இவ்வழக்கு இக்காலத்தில் இல்லை.

குறிப்பு: கருத்தா, முதல் வேற்றுமையாய் இருக்கும்போது
செயப்படு பொருள் இரண்டாம் வேற்றுமையாய் வரும்.

தச்சன் கோயிலைக் கட்டினான்.

கருத்தா மூன்றாம் வேற்றுமையாய் இருக்கும் போது செயப்படு
பொருள் முதல் வேற்றுமையாய் வரும்.

தச்சன் கோயிலைக் கட்டினான்.

நான்காம் வேற்றுமை

நான்காம் வேற்றுமை உருபு கு ஆகும். ஆக, பொருட்டு,
நிமித்தம் ஆகியவை நான்காம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள்
இந்நான்காம் வேற்றுமையானது கொடை, பகை, நட்பு, தகுதி
அதுவாதல், பொருட்டு, முறை முதலிய பொருள்களில் வரும்.

யாசகர்க்குக் காசு கொடுத்தான் -
சீவகனுக்குப் பகைவன்கட்டியங்காரன் -
கபிலருக்கு நண்பர் பரணர் -
அரசர்க்கு உரியது முடி (கிரீடம்) -
மோதிரத்திற்குப் பொன் -
கூலிக்கு வேலை செய்தான் -
மாதவிக்கு மகள் மணிமேகலை -
கூலிக்காக வேலை செய்தான் -
கூலியின் பொருட்டு வேலைசெய்தான் -
கூலியின் நிமித்தம் வேலைசெய்தான் -
கொடை(கொடுத்தல்)
பகை
நட்பு
தகுதி (Fitness)
அதுவாதல் (For)
பொருட்டு (Purpose)
முறை (Relationship)
ஆக (Purpose)
பொருட்டு (Purpose)
நிமித்தம் (Purpose)