|
இரண்டாம்வேற்றுமைக்கு இரண்டு செயப்படுபொருள்கள் அருகி
வருவதுண்டு.
அவன் பசுவைப் பாலைக் கறந்தான். இவ்வாக்கியம் நன்றாக
இருக்கிறதா? இல்லையன்றோ? ஆதலால்.
அவன் பசுவினது பாலைக் கறந்தான் என மாற்றி அமைப்பது
சிறப்பு.
மூன்றாம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
என்பவை. கொண்டு என்பது சொல்லுருபு. இவ்வேற்றுமைக்குரிய
பொருள்கள் கருவி, கருத்தா, உடனிகழ்ச்சியாகும்.
ஆல், ஆன், கொண்டு என்னும் உருபுகள் கருவிப் பொருளிலும்
கருத்தாப் பொருளிலும். ஒடு, ஓடு என்னும் உருபுகள் உடனிகழ்ச்சிப்
பொருளிலும் வரும்.
1. வாளால் வெட்டினான்,
வாளான் வெட்டினான்,
வாள் கொண்டு வெட்டினான்.
|
கருவிப் பொருள்(அஃறிணையால்
அமைவது
கருவிப் பொருள்.) |
2. அரசனால் ஆகிய கோயில்
|
கருத்தாப் பொருள்
(உயர்
திணையால் அமைவது கருத்தாப்
பொருள்.) |
3. ஆசிரியரொடு மாணாக்கன்
வந்தான். தந்தையோடு மகன்
வந்தான்.
|
உடனிகழ்ச்சிப்
பொருள் (உடன்
நிகழ்வது) ஒடு, ஓடு, உடன்
ஆகியவை ஒரு பொருளனவே. |
குறிப்பு: தொல்காப்பியர் ஒடு உருபை மட்டும் கூறியுள்ளார்.
பிற்காலத்தார் ஓடு என்னும் உருபையும் சேர்த்துள்ளனர். தொல்காப்பியர்
இவ்வுருபுகளை உயர் பொருளின் இறுதியில் சேர்த்து அரசனொடு வீரர்
வந்தனர் என்றாவது ஆசிரியரொடு மாணாக்கர் வந்தனர் என்றாவது
எழுதவேண்டுமேயன்றி,
|